புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

0
129

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மீன் வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இறுதி ஆண்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையிலே டிசம்பர் மாதம் இறுதி வரை கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கின்றார் இந்த அறிவிப்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது வரும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கலை அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் வேளாண்மை மீன்வளம் கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்படுகின்றது மாணவர்களுக்காக விடுதிகளும் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் ஆகியவை டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 2020 21ஆம் கல்வி ஆண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்பு 1-2 – 2020 முதல் தொடங்க அரசு அனுமதி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கு முன்னரே நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவை ஒத்தி வைக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் மீண்டும் கல்லூரிகளை ஒத்திவைப்பதாக தெரிவித்து இருந்தது இந்த நிலையில் மீண்டும் கல்லூரிகளை திறப்பதற்கு அனுமதி அளிப்பதாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றன.