நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தில் இருக்கின்ற கொலிஜியம் முறையை தேர்தல் ஆணையர்கள் நியமனத்திலும் செயல்படுத்த உத்தரவிடக்கோரி பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகளை நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று அமர்வு கடுமையாக விமர்சனம் செய்தது. இந்த வழக்கு நேற்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்ற ராமர் தெரிவித்ததாவது மத்தியில் ஆளும் எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியில் தொடரவே விரும்பும் தனக்கு ஆமாம் சாமி போடுபவர்களையே தேர்தல் ஆணையத்தில் நியமனம் செய்யும் வகையிலேயே தற்போதைய நடைமுறைகள் இருக்கின்றன. கடந்த 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் ஆணையச் சட்டத்தில் தேர்தல் ஆணையர்களின் பணி தொடர்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே சமயம் தேர்தல் ஆணையம் மிகவும் வெளிப்படையாகவும், தன்னாட்சி உடையதாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுகிறார்.
இந்த நியமனம் குறித்து ஆலோசனை நடத்தும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம் பெற்றால் வெளிப்படை தன்மை உண்டாகும்.
தேர்தல் ஆணையத்தில் அனைத்து நிலைகளிலும் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் அது நியாயம் என்ற துவக்க நிலையில் இருந்து துவங்க வேண்டும் என்று அந்த அமர்வு தெரிவித்துள்ளது.