வந்தாச்சு மத்திய அரசு வேலை!! ஆதார் ஆணையத்தில் பணிபுரிய ஆசையா? வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

0
115
#image_title

வந்தாச்சு மத்திய அரசு வேலை!! ஆதார் ஆணையத்தில் பணிபுரிய ஆசையா? வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி காலியாக உள்ள Accountant & Section Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)

பணி:

1.Accountant

2.Section Officer

பணியிடங்கள்: Accountant மற்றும் Section Officer பணிகளுக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Chartered Accountant / Cost Accountant / MBA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு மத்திய அரசின் அதிகாரிகளாக Pay matrix level 06 முதல் Pay Matrix Level 07 அளவின் கீழ் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 56 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: Accountant மற்றும் Section Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay matrix level 08, Pay matrix level 06 ஊதிய அளவின் படி மாதம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://uidai.gov.in/images/document_-_2023-07-11T134554849.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய இன்று அதாவது செப்டம்பர் 11-12-2023 இறுதி நாள் ஆகும்.