Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வந்தாச்சு மத்திய அரசு வேலை!! ஆதார் ஆணையத்தில் பணிபுரிய ஆசையா? விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!

#image_title

வந்தாச்சு மத்திய அரசு வேலை!! ஆதார் ஆணையத்தில் பணிபுரிய ஆசையா? விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி காலியாக உள்ள Assistant Account Officer,Assistant Section Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI)

பணி:

1. Assistant Account Officer

2.Assistant Section Officer

பணியிடங்கள்: Assistant Account Officer,Assistant Section Officer பணிகளுக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Chartered Accountant/Cost Accountant/MBA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதனோடு மத்திய அரசின் அதிகாரிகளாக Pay matrix level 05, Pay Matrix Level 03, Pay Matrix Level 04 அளவின் கீழ் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 56 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: Assistant Account Officer,Assistant Section Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay matrix level 08,Pay matrix level -06 ஊதிய அளவின் படி மாதம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: Assistant Account Officer,Assistant Section Officer பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://uidai.gov.in/images/document_-_2023-07-11T134554849.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய இன்று அதாவது செப்டம்பர் 11-09-2023 இறுதி நாள் ஆகும்.

Exit mobile version