Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வந்தாச்சு அரசு வேலை.. பணியிடம்: திருச்சி!! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்டீடாதிங்க பெண்களே!!

#image_title

வந்தாச்சு அரசு வேலை.. பணியிடம்: திருச்சி!! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்டீடாதிங்க பெண்களே!!

நம்ம திருச்சிராப்பள்ளி உள்ள மகளிர் தனிச்சிறையில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி “துப்புரவு பணியாளர்” பணிக்கு தகுதி இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தபால் வழியாக வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: அரசு பணி

நிறுவனம்: மகளிர் தனிச்சிறை(திருச்சிராப்பள்ளி)

பதவி: துப்புரவு பணியாளர்

பணியிடம்: திருச்சிராப்பள்ளி

காலிப்பணியிடம்: மொத்தம் 01

கல்வித் தகுதி: துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – பெண்கள் (MBC – General Priority – Women)

சம்பள விவரம்: துப்புரவு பணியாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

துப்புரவு பணியாளர் பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.பின்னர் அதை பூர்த்தியிட்டு முறையான ஆவண நகலுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பப் படிவத்துடன் அனுப்ப வேண்டிய ஆவண நகல்கள்:

சாதிச் சான்றிதழ்,ஸ்மார்ட் கார்டு,ஆதார் அட்டை,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,கல்வி சான்று உள்ளிட்டவற்றை அனுப்ப வேண்டும்.

முகவரி:

சிறை கண்காணிப்பாளர்,மகளிர் தனிச்சிறை,காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில், திருச்சி-620008.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 31-10-2023

Exit mobile version