வந்தாச்சு அடுத்த அடி? உஷாராக இருங்க !படையெடுத்து வரும் கொரோனா வைரஸ்!!

0
152

வந்தாச்சு அடுத்த அடி? உஷாராக இருங்க !படையெடுத்து வரும் கொரோனா வைரஸ்!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சில மக்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் வெளியில் எந்த ஒரு அச்சமும் இன்றி செல்ல தான் செல்கிறார்கள்.இதனால்  கடந்த 24 மணி நேரத்தில் 2,541பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 2,593 பேருக்கு தொற்று பதிவான நிலையில் இன்று 2,541 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,60,086 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக தலைநகர் சென்னை,கோவை,காஞ்சிபுரம்செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா மீண்டும் படையெடுத்து வருகிறது.இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயமாக முகாகவசம் அணிய வேண்டும். இதனை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசின்படி   சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு கொரோனா துரத்தி வருவதால் சென்னையில் பேருந்துகளில் பயணிப்போர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.முக்கியமாக பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் முக கவசம் அணிய வேண்டும்.மேலும் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.எனவே மாநகர பணியாளர்கள் அனைவரும் கொரோனா  தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் .