Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வர வேண்டும்!!! பிரபல நடிகை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!!!

#image_title

பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வர வேண்டும்!!! பிரபல நடிகை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!!!
பட வாய்ப்புகள் வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என்று என்னை அமைத்துள்ளனர் என்று பிரபல நடிகை இனியா அவர்கள் வேதனையுடன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
தமிழில் பாடகசாலை என்ற திரைப்படம் மூலமாக  அறிமுகமான மலையாள நடிகை இனியா அவர்கள் தொடர்ந்து யுத்தம் செய், வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒருநாள், மாசாணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது இனியா ஒருசில தமிழ் படங்களிலும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இனியா அவர்கள் தனக்கு நடந்த பாலியல் தில்லை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இது குறித்து நடிகை இனியா அவர்கள் “வாகை சூடவா திரைப்படத்திற்கு பிறகு ஒனக்கு சரியான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இயக்குனர்களும் சரி தயாரிப்பு நிறுவனங்களும் சரி என்னை சரியாக பயன்படுத்தவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.
நான் திரைத்துறையில் நடிக்க வந்த புதிதில் என்னுடைய நிறத்தை காரணம் காட்டி எனக்கு படவாய்ப்புகள் மறுக்கப்பட்டது. மேக்கப் என்று ஒன்று இருக்கும் பொழுது நிறத்தை காரணமாக எதற்கு சொல்கிறார்கள் என்று யோசித்து மிகுந்த வருத்தம் கொண்டேன். திரைத்துறையில் எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் வந்தவள் நான்.
படத்தில் நடிக்க வாய்ப்புகள் வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என்று என்னையும் அழைத்தார்கள். இது போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு நாம் எப்படி அதிலிருந்து கடந்து வருகிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கின்றது.
ஒரு அறையின் கதவை திறந்துவிட்டு யார் என்று கூட தெரியாத நபரை அறையினுள்  விட்டு அவர் எல்லை மீறிவிட்டார் என்று கூறினாள் அதற்கு முழுப் பொறுப்பையும் நாம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் கதவை திறக்க வேண்டுமா அல்லது திறக்கக் கூடாதா என்பதை பற்றி நாம் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
Exit mobile version