Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

24 மணி நேரமும் ஜாலியாக இருக்கலாம்! லாட்ஜுக்கு வா என்று அழைத்த பெண்! நம்பி சென்ற இளைஞன்! பின்?

கேரளாவில் ஆர்யா என்ற பெண் ஒரு இளைஞரை மயக்கி ஹோட்டலுக்கு வரவழைத்து அவரிடம் உள்ள பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கொத்தமங்கலத்தில் சேர்ந்த ஆர்யா என்ற பெண் முவட்டுபுழா என்ற பகுதியை சேர்ந்த இளைஞரை மயக்கி லாட்ஜுக்கு இருவரும் தனிமையாக இருக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார். அங்கு வந்த இளைஞர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் நான்கு இளைஞர்கள் இருந்துள்ளனர்.

முகமது யாசின், அஸ்வின், ஆசிப், ரிஸ்வான் என்ற நான்கு இளைஞர்கள் இருந்துள்ளனர். அப்பொழுது ஆர்யா என்ற இளம்பெண் வந்த இளைஞரை நிர்வாணமாக்கி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படம் வெளியே சமூக வலைதளங்களில் பரவாமல் இருப்பதற்காக மூன்றரை லட்சம் கேட்டு ஆர்யாவும் அந்த நான்கு இளைஞர்களும், இந்த இளைஞரை மிரட்டி உள்ளனர்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய அந்த இளைஞரின் கார், செல்போன், ஏடிஎம் கார்டை பிடுங்கி வைத்துள்ளனர்.

அந்த நபரின் ஏடிஎம் கார்டில் இருந்து 35 ஆயிரம் பணத்தை எடுத்து உள்ளனர். மேலும் அந்த நபரை காரில் ஏற்றிக் கொண்டு ஊர் முழுக்க சுற்றி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.மேலும் காரில் இருந்து கீழே இறங்கி தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்.

அவர் குரலை கேட்ட ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர், மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை போலிசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version