காமெடி நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஆன கோதண்டராமன் இறைவனடி சேர்ந்தார்!!

0
105
Comedy actor and stunt master Kothandaraman joins Lordship!!

2012 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படத்தில் காமெடி நடிகர் ஆக நடித்தவர் தான் கோதண்டராமன்.

25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.விஜய், அஜித் உள்ளிட்டோரின் படங்களிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். சண்டை பயிற்சியாளராக அவரை தெரிந்ததைவிடவும் கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் அவர் வந்த காமெடி சீனிலிருந்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.

ஸ்டண்ட் மாஸ்டராகத்தான் தனது பயணத்தை தொடங்கினார் கோதண்டராமன். முதலில் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த அவர் அடுத்ததாக துணை சண்டை பயிற்சியாளராக மாறினார். பல படங்களுக்கு அப்படி பணியாற்றிய அவர் ராம்கியின் எல்லாமே என் பொண்டாட்டிதான் என்ற படத்துக்கு சண்டை பயிற்சியாளராக ப்ரோமோட் ஆனார். அதற்கு பல ஹீரோக்களின் படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட இவர், உடல்நலக்குறைவால் பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ( டிசம்பர் 18 ) இரவு 10 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். இறுதிச் சடங்கு ஆனது இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இவருடைய உடலுக்கு திரையுலகை சார்ந்த அனைவரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.