Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபலங்கள் கலந்துகொண்ட காமெடி நடிகர் சதீஸ் திருமணம்!

பிரபல காமெடி நடிகர் சதீஸ் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது. இந்நிலையில் அவர்களின் திருமணம் இன்று நடைபெற்றது

சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி சதீஷ் – சிந்து இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களுக்கும் திரையுலகில் இருக்கும் தனது நண்பர்களுக்கும் சதீஷ் திருமன அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார்.விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், முருகதாஸ் பிரபலங்கள் சதீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்டனர்.

Exit mobile version