நிஜ ஹீரோவாக மாறிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் :

0
179

ரோபோ சங்கர் ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.இவரின் திறமையால் வெள்ளித்திரையிலும் காமெடியில் தடம் பதித்து வருகிறார்.இவர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டியும் சிறந்த சமூக சேவை செய்பவர் .

இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் இவர் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டி வந்தார். நகைச்சுவை நடிகரான இவர் தனது சிறப்பான ஒரு செயலினால் நிஜ ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.அதாவது உடல் தானம் செய்துள்ளார்.

ரோபோ சங்கர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராவார்.கமலின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு அவரிடம் ஆசி வாங்கி வருவது இவரது வழக்கம்.நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மக்கள் நீதி மைய்ய கட்சியின் தொண்டர்கள் கண் சிகிச்சை முகம் ஒன்றை நடத்தினர்.

அந்த கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் அங்கு உடல் தானம் செய்தார்.இந்த ஆடல் தானம் செய்த சான்றிதழை வருகிற நவம்பர் 7-ம் தேதி ,அதாவது கமலின் பிறந்தநாளன்று அவரிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற இருப்பதாக கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .