வரும், அக்டோபர் 17ம் தேதி அதிமுக பொன் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் 16 ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அதன்பின், இவர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த உரையாடலில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேசுகையில் அதிமுகவை தலைமை ஏற்க வருமாறு தெரிவிக்கின்றனர். சசிகலாவும் விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அதிமுக பொன்விழா பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை அடுத்து வரும் அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக பொன் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், 16ஆம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார். மேலும், மறுநாள் ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு செல்லவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது