வரும் ஜனவரி 27 இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் மிகவும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருபது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் தான்.இங்கு தை மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.அதேநேரத்தில் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.பொதுவாகவே 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஜனவரி 27 ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றது.பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு கடந்த தினங்களில் தொடங்கப்பட்டது.ஜனவரி 21 ஆம் தேதிக்கு பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்த 2000 பக்தர்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி அல்லது போன் நம்பருக்கு தகவல் அனுப்பப்படும்.
அதனை தொடர்ந்து நேற்று மற்றும் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாங்கள் பதிவேற்றம் செய்த அடையாள சான்று நகலுடன் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வேலவன் விடுதிக்கு சென்று இலவச அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் வரும் ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்ரவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.