Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தளபதி படம் தான் ஃபர்ஸ்ட் ரிலீஸ்! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது  டாப்1 தியேட்டர்!  

கொரோனா தாக்கத்தின் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளின் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். 

காரணம் திரையரங்குகளில் வெளியிட வேண்டிய படங்கள் அனைத்தும் OTTயில் போட்டியில் வெளியாகி தியேட்டர் ஓனர்களை கதிகலங்கச் செய்தது. மேலும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு திரைப்படமாக வரிசையாக OTTயில் ரிலீஸ் ஆகின.

அந்தவகையில் பொன்மகள்வந்தாள், பென்குயின், லாக்கப் போன்ற மூன்று படங்கள் OTTயில் வெளியாகின. மேலும் விஜய் சேதுபதியின்  படமும் அனுஷ்காவின் நிசப்தம் படமும் வெளியாக தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான ஐநாக்ஸ் திரையரங்கம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திரையரங்கம் மீண்டும் திறந்தவுடன் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படமே முதலில் திரையிடப்படும் என அறிவித்துள்ளது. மேலும் அதில் மாஸ்டர் படத்தையும் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version