Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களைப் பற்றிய உதயநிதியின் அந்த வார்த்தை! அதிகரிக்கிறது கண்டனம்!

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

எதிர்க்கட்சியான திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி என தெரிவிக்கின்றோம். டெட்பாடி ஆட்சி என்று சொல்கிறார்கள். சசிகலாவின் காலில் விழுந்து தானே முதல்வரானார் நாற்காலி,மற்றும் மேஜைகளுக்கு இடையில் புகுந்து தானே விழுந்து கிடந்தார் என்று தெரிவித்ததோடு, மோசமான வார்த்தை ஒன்றையும் பிரயோகம் செய்து இருக்கிறார்.

அவரின் இந்த பேச்சை கேட்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்த அந்த கட்சி நிர்வாகிகளும் சிரித்தார்கள் 36 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த காணொளி காட்சி, சமூக வலைதளங்களில் பரவிய நிலையிலே, உதயநிதிக்கு எதிரான கண்டனங்கள் அதிகமாகி வருகின்றன.

சசிகலாவின் சகோதரி மகன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் உதயநிதிக்கு காட்டமான பதிலடி கொடுத்து இருக்கின்றார். பெருந்தலைவர் காமராஜர் போன்ற மிகப் பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்திப் பேசி கருணாநிதியின் பேரன் என்பதை ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் திமுகவிற்கும் எப்போதுமே சம்பந்தம் இருந்தது இல்லை. என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம் என்று தெரிவித்திருக்கிறார்.

மனம் முழுவதும் அருவருக்கும் குரூர சிந்தனை நிரம்பி இருக்கும் ஒருவரால் மட்டுமே இவ்வாறு பேச இயலும். ,தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் தான் என்பதை மறந்து பேசி இருக்கின்றார். அவர் வந்த வழி அவ்வாறு இருக்கின்றது. பெண்களை பெரிதாக மதிக்கின்ற தமிழ் சமுதாயத்தில் இதுபோன்ற குணம் உடையவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

நடிகையும் ,பாஜகவின் நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். எவ்வளவு அருவருப்பான வார்த்தை அது உதயநிதி தெரிவித்தது நகைச்சுவை அல்ல .பெண்களைப்பற்றி இரட்டை அர்த்தத்தில் மிகத்தெளிவாக கூறிய மோசமான வார்த்தைகள் அது. வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான முறையில் திமுகவால் ஏதாவது பேச இயலுமா என கேள்வி எழுப்பியிருக்கிறார் காயத்ரி ரகுராம்.

கோவை ஸ்மார்ட் சிட்டி லிமிடேஷன் கூடுதல் இயக்குனராக பணியாற்றுவதாக தெரிவித்திருக்கின்றார் கிருத்திகா. அருவருப்பானது இதுபோன்ற ஒரு பேச்சை நாங்கள் கேட்பதற்கு விரும்பவில்லை. இதற்கு மேலே ஒரு அசிங்கம் இருக்கிறதா? என உதயநிதியின் பேச்சுக்கு தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். நடிகை கஸ்தூரி எப்போதும் அதே நினைப்புதான் போல என தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். இதேபோல உதயநிதிக்கு கண்டனங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

Exit mobile version