கேஸ் சிலிண்டருக்கான விலை மறுபடியும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 6வது முறையாக வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் உண்டாகும் மாற்றம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான கச்சா எண்ணெய்யின் நிலை அதிகரித்து பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு அதிகரித்தது.
ஆனால் தற்சமயம் கச்சா எண்ணெயின் விலை குறைய தொடங்கியதை தொடர்ந்து அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.
ஆகவே வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் 25.50 பைசா குறைத்துள்ளனர்.
ஆகவே சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை 2045 ரூபாயிலிருந்து 2009.50 காசுகளாக குறைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் 1,885 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சிலிண்டர் தற்சமயம் விலை குறைந்து 1859 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே மாதம் 19ஆம் தேதிக்கு பிறகு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 6வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வீட்டில் சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் நிலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.