Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி (வயது 92) இன்று காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் அய்யலுசாமி பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர், நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், 1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊரான பெருமாள் பட்டியில் உள்ள வீட்டில் இன்று அதிகாலையில் அவர் காலமானார். இவரின் மறைவுக்கு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version