நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது!

0
260
companies-continue-to-take-the-decision-to-fire-employees-that-includes-walt-disney

நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வரும் ஊழியர்கள் பணி நீக்கம் முடிவு! அதில் வால்ட் டிஸ்னியும் சேர்ந்துள்ளது!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் பெரும்பாலானவர்களை பணி நீக்கம் செய்தது.

மேலும் நடப்பாண்டில் முதலிலேயே அமேசான் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. என் நிலையில் உலக அளவில் மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனமாக இருப்பது வால்ட் டிஸ்னி. இந்த பூங்கா பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள்  வால்ட் டிஸ்னியில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் 5.5 அமெரிக்க டாலர்களை செலவை மிச்ச படுத்த 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.கொரோனா காலமான 2020 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி சுமார் 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.