ஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!!

0
123

ஹிட்லரின் ஆட்சியில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு!!! 80 ஆண்டு காலம் நடந்து வந்த வழக்கில் வெளியானது தீர்ப்பு!!!

அடால்ப் ஹிட்லர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று 80 ஆண்டுகளாக நடந்த வழக்கில் நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு அளித்துள்ளது.

ஜெர்மனி நாட்டில் 1933 முதல் 1945 வரை அடால்ப் ஹிட்லர் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. அடால்ப் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இவருடைய நாஜி கட்சியை சேர்ந்தவர்கள் ஜெர்மனி நாட்டிலும் இத்தாலி நாட்டிலும் இருந்த பல்லாயிரக் கணக்கான யூதர்களை பல்வேறு முறைகளில் கொலை செய்து குவித்தனர்.

1943ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி தனது நட்பு நாடான இத்தாலியை ஆக்கிரமித்துக் கொண்டது. அப்பொழுது ஜெர்மனி நாட்டின் போர் வீரர்களை கொலை செய்ததாக கூறி தெற்கு இத்தாலியின் மொலிஸ் பகுதியில் உள்ள ஃபோர்னெல்லி என்னும் பிராந்தியத்தில் இருந்து இத்தாலியை சேர்ந்த 6 குடிமக்களை அப்போது ஆட்சியில் இருந்த நாஜி படையினர் தூக்கில் போட்டு கொலை செய்தனர்.

1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் கடைசியில் அடால்ப் ஹிட்லர் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பிறகு நாஜி படையை சேர்ந்தவர்கள் மீது போர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு நாஜி படையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபோர்னெல்லி தொடர்பான வழக்கு 80 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 80 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதன்படி 1943ம் ஆண்டு நாஜி படையால் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 பேரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு 13 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் 107 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உயிரிழந்த 6 பேரின் வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு இது சென்றடைய வேண்டும் எனவும் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த நஷ்ட ஈட்டை ஜெர்மனிக்கு பதிலாக இத்தாலி தர வேண்டும் என்று தீர்ப்பு வெளியாகி இருக்கின்றது. அது எதனால் என்றால் சமீபத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் இது போன்று நடைபெற்ற முக்கிய வழக்கின் இறுதிக்கட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.