மாஜி மந்திரி மீது அளிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு புகார்! விளக்கமளித்த முன்னாள் அமைச்சர்!

0
135

ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில்தான் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தன் மீது புகார் வழங்கப்பட்டு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்திருக்கிறார். தன் மீது வருமானத்திற்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அரப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்து இருக்கின்ற நிலையில், அவர் இவ்வாறு விளக்கம் அளித்திருக்கிறார்.

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் தமிழ்நாட்டில் அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் சென்றமாதம் திமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டார்கள். இதனை தொடர்ந்து முன்னாள் ஊராட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லம் மற்றும் அவர் குறித்த இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ஏராளமான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது இது ஒருபுறம் அதிமுகவை கலங்கடித்து வருகிறது,

ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் அறப்போர் இயக்கம் சார்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் அதிரடியாக புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் திமுகவின் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 76.65 கோடி சொத்து சேர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் பொது ஊழியராகவும், சட்டசபை உறுப்பினராகவும் மற்றும் அமைச்சராகவும் இருந்த சமயத்தில் தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக 76.65 கோடி குவித்திருக்கிறார். இதற்கான ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கே சி வீரமணி கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் ஜோலார்பேட்டை சட்டசபை உறுப்பினராக இருந்தவர் அவர் 2016 முதல் 2021 வரையில் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக பணியாற்றினார். அவருக்கு 43 ஆயிரம் கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் மற்றும் 15,000 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருக்கிறது. என்றும் அரப்போர் இயக்கம் தெரிவித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் வீரமணி என் பெயரில் இருக்கின்ற அசையும் சொத்துகள் மட்டுமே கடந்த பத்து வருடங்களில் ரூபாய் 43 கோடி அளவில் அதிகமாக இருக்கிறது. அதோடு அவர் பெயரிலும் அவருடைய குடும்பத்தார் பெயரிலும் பல அசையா சொத்துக்கள் வாங்க பட்டிருக்கின்றன. சென்ற 10 வருடங்களில் குறைந்தபட்சமாக 76.65 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார் என்று பதில் தெரிவித்திருக்கிறது அறப்போர் இயக்கம்.

அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரமணி விளக்கம் கொடுத்திருக்கிறார். ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரில் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இந்த புகாரின் மீது கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறுவயது முதலே வணிகத்தில் ஈடுபட்டு முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரமாண பத்திரத்தில் கூட முறையான தகவல்கள் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், தான் எந்த ஒரு முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.