Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூரண மதுவிலக்கு அமல்.. அமைச்சரவையில் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!!

Complete prohibition of alcohol.. The important decision to be taken in the cabinet!!

Complete prohibition of alcohol.. The important decision to be taken in the cabinet!!

DMK: மதுபான கடைகள் மூடப்படுவது குறித்து முக்கிய முடிவானது அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இதனால் பல குடும்பங்கள் சீரழிவதோடு இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாக நேரிடுகிறது.இதனை தவிர்க்கும் விதமாக மது கடைகள் கட்டாயம் மூடப்பட வேண்டுமென பாமக தலைவர் முதற்கொண்டு வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் அரசுக்கு பெரும்வாரியான வருமானமானது மாதுபான கடைகளிலிருந்து தான் கிடைக்கிறது.அதிமுக ஆட்சியிலிருந்த பொழுது கிட்டத்தட்ட 1000 கடைகள் மூடப்பட்டது.

அதுமட்டுமின்றி மதுபான கடைகள் திறக்கும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு இருக்கையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 500 கடைகளை மூடுவதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதேபோல அந்த 500 கடைகளும் மூடப்பட்டது. இருப்பினும் சமீப காலமாக போதைப்பொருள் பயன்படுத்துவதில் இளைஞர்கள் பங்கு அதிகரித்து விட்டதாகவும், இதனால் கொலை கொள்ளை தினசரி நடப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேற்கொண்டு மதுபான கடைகளை மூடும்படி வலியுறுத்தியும் வருகின்றனர்.இதன் கோரிக்கையை ஏற்று மீண்டும் 500 மதுபான கடைகளை மூடப்படுவதாகவும் அதுகுறித்து கடைகளை ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளனர்.இதன் முக்கிய முடிவுகளை வரும் 8 ஆம் தேதி நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Exit mobile version