Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தையின்மைக்கு முற்றிலும் தீர்வு!! அரச மரம் இலை போதும்!!

குழந்தையின்மைக்கு முற்றிலும் தீர்வு!! அரச மரம் இலை போதும்!!

மூட நம்பிக்கைகளை விட்டொழித்து இயற்கை வழியில் நோய்களை வென்றெடுக்கலாம். குழந்தையின்மை குறையைப் போக்கலாம்.

எல்லாச் செல்வங்களையும் விட குழந்தைச் செல்வம்தான் சிறந்தது என்பார்கள். ஆனால், இன்றைக்குப் பல்வேறு சூழல்களால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் பலரும் அவதியுறுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

காரணம்:

உணவுப்பழக்கம், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் என அதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கட்டுப்பாடுகள் இல்லாத இந்த உலகத்தில் வரம்புகளை மீறுவதும் நியதிகளுக்கு உட்பட்டு வாழாதிருப்பதும் குழந்தையின்மைப் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணங்களாகச்

குழந்தையின்மைப் பிரச்னைக்கு ஆண் பெண் இரண்டு பேருமே காரணமாக இருக்கிறார்கள்.

புதியதாகத் திருமணம் செய்த தம்பதி தொடர்ந்து ஓராண்டு காலம் உடலுறவு வைத்தும் கருத்தரிக்காமல் போனால் இரண்டுபேரில் ஒருவருக்கோ இருவருக்குமோ கோளாறு இருக்கலாம் என்று அர்த்தம். அதை மனதில் கொண்டு தேவையான பரிசோதனைகளைச் செய்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

நூடுல்ஸ் வழுவழுப்பாக இருப்பதற்குக்காரணம் அதில் சேர்க்கப்படும் மெழுகு போன்ற பொருள்களே.

இப்படித் துரித உணவுகளைச் சாப்பிட்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வது, தவறான வாழ்வியல் பழக்கத்தை மேற்கொள்வது, மனஅழுத்தம், மரபியல், ஹார்மோன் குறைபாடுகள் ஆகிய பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அரசமர இலை:

அரச மரத்தின் காற்றைச் சுவாசிக்கும் பெண்களுக்குக் கருப்பைத் தொடர்பான நோய்கள் குணமாகும்; குழந்தைப்பேறுக்கும் நல்லது.

மேலும், பொதுவாகக் கைப்பிடி அரச மரத்தின் இலைக்கொழுந்தை மையாக அரைத்து தயிர் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து சாப்பிடலாம். இலைக்கொழுந்தை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் பெண்களுக்கான கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் சரியாகும்.

ஆண்களும் இதே மருந்தை சாப்பிடுவதால் பலன் கிடைக்கும். குறிப்பாக ஆண்கள் அரசம் பழத்தின் பொடி 5 முதல் 10 கிராம் அளவு எடுத்துப் பாலில் கலந்து காலை, மாலை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலம் பெருகுவதோடு விந்தணுக்கள் கெட்டிப்பட்டு உடல் பலம் பெறும்.

Exit mobile version