Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓய்வூதியம் பெற கட்டாயமாக்கப்பட்ட சான்றிதழ்!! மத்திய அரசு அறிவிப்பு!!

இந்திய அளவில் ஓய்வூதியம் பெற்ற வருபவர்கள், அதாவது மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுடைய ஓய்வூதியங்களை பெறுவதற்கு உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சான்றிதழை பெற ஓய்வூதியதாரர்கள் கஷ்டப்படும் நிலையில், அதனை அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஷ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அஞ்சல் துறை முடிவெடுத்துள்ளது. இதனை தபால்காரர்கள் மூலமே அவர்களது வீடுகளில் வழங்கியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதியங்களை பெற வருமானவரிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது.

இதற்காக தான், ஓய்வூதியதாரர்கள் உடைய வீட்டில் இருந்தபடியே, டிஜிட்டல் மூலம் கைரேகை மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டணமாக 70 ரூபாயை தபால்காரரிடம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது வீட்டின் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று அல்லது தபால் காரர்களை தொடர்பு கொண்டு “Postinfo” செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம்.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து தபால் நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை வடக்கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் லட்சுமணன் பிள்ளை குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version