Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்த ஆணுறைகள்! அந்த வழக்கில் துப்பு துலக்கிய போலீஸ்!

Condoms that were a kilometer away! The police who brushed off the case!

Condoms that were a kilometer away! The police who brushed off the case!

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்த ஆணுறைகள்! அந்த வழக்கில் துப்பு துலக்கிய போலீஸ்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்படுத்திய ஆணுறைகளை மர்ம நபர்கள் சாலையில் வீசிய வழக்கில் திடீரென ஒரு தங்கும் விடுதியில் இருந்த ரகசிய அறை மூலம் விபச்சாரம் நடந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக தற்போது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் தும்கூர் மாவட்ட மேம்பால பகுதியில் சென்னை- டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சாலையில், அதுவும் பொது வெளி என்று கூட பார்க்காமல், சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை மர்ம நபர்கள் வீசி சென்று இருந்தனர்.

இதுகுறித்து தும்கூர் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் மூலம் அதே பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தி வருவதும், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய ஆணுறைகளை சேர்த்து வைத்து அதை சாலையோரம் யாருக்கும் தெரியாமல் வீசிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த தங்கும் விடுதியில் விபசாரம் செய்பவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட தங்கும் விடுதியில் போலிசார் திடீரென அதிரடி சோதனையும் மேற்கொண்டனர். அப்போது அங்கு விபச்சாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கும் விடுதியில் வேறு ரகசிய சுரங்க அறை  அமைத்து விபச்சாரம் நடத்துவதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக 2 வாலிபர்கள் உட்பட 7 பேரை போலீசார் தற்போது வரை கைது செய்துள்ளனர். மேலும் போலீசாரின் சோதனையின்போது விபசாரத்தில் ஈடுபட்ட பெண் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கைதான  அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த தேசிய நெடுஞ்சாலையில் இந்த கும்பல்தான் ஆணுறைகளை வீசிச் சென்றது என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் மேலும் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

Exit mobile version