விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் குழப்பம்!! தேதியை மாற்றி வைக்கக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!!

0
116
#image_title

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் குழப்பம்!! தேதியை மாற்றி வைக்கக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!!

செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதே நேரம் சதுர்த்தி திதியானது செப்டம்பர் 18 ஆம் தேதி தான் வருகிறது என்று குறிப்பிட்டு அன்று தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை நாளை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய,மாநில அரசுகள் அறிவித்துள்ள விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை தேதிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை செப்டம்பர் 19 ஆம் தேதி என மத்திய அரசு அறிவித்துள்ளது.ஆனால் அரசு ஊழியர்களுக்கு விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை செப்டம்பர் 18 ஆம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு தேதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதே இதற்கு காரணம்.இதனால் விடுமுறை தினத்தில் குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளபடி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்ற வேண்டும் என மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. ஒன்றிய உள்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி விடுமுறை.

ஆனால் தமிழ்நாட்டில் பணி புரியும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வழிபாட்டு பன்முகத் தன்மையைக் கணக்கிற்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டுமென்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.