உள்கட்சி பூசல்களால் கட்சியின் தேர்தல் நடக்காவிட்டால், காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கும் எதிர்க்கட்சி இருக்கையில் அமர வேண்டும் குலாம் நபி ஆசாத் ஆவேசமாக பேசியுள்ளார்.
நடந்த முடிந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின் தீர்மாணம் மூலம் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடர்வார் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த முடிவு கட்சியில் உள்ள சிலருக்கு முழுநேர தலைவராக இருக்க வேண்டும் என கோரியிருந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கு அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே எழுதியிருந்த அதிருப்தி கடிதத்தில் 24 காங்கிரஸின் மூத்த தலைவர்களில் குலாம்நபி ஆசாத் கட்சியில் தேர்தல் மூலமாக மட்டுமே தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளதாவது, “நமது கட்சியில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தவில்லை என்றால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்.
எனது கட்சியினை சுறுசுறுப்பாகவும், வலிமை மிக்கதாகவும் மாற்ற வேண்டும் என்பதே நோக்கமாகும். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் உண்மையாக அக்கறை உள்ளவர்கள் காரியக் கமிட்டி குழுவின் மூலம் தேர்தல் நடத்தி கட்சியின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழுவின் மூலம் தேர்தல் நடத்தி அதன் உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பத்து, அவர்களின் பதவி காலத்தை நிர்னயிப்பதன் மூலம் என்ன கெட்டு விடப் போகிறது?
ஒரு கட்சியில் தேர்தலின் மூலம் தான் நிரந்தரத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். அப்போதுதான் குறைந்தபட்சம் 50 சதவிகித கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அவரின் பின்னால் இருப்பார்கள்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்தி பணி நியமனம் செய்யும்போது, அவர்களை எளிதாக பதவியில் இருந்து நீக்க முடியாது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர், மண்டலத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஏற்கனவே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
இப்போது எங்களை எதிர்ப்பவர்கள், கட்சியின் தேர்தல் நடைபெற்றால் காணாமல் போய் விடுவார்கள் என அவர்களுக்கே தெரிந்துவிட்டது போல் இருக்கிறார்கள்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் எங்களது கோரிக்கையினை ஏற்றுக் கொள்வார்கள்” என குலாம் நபி ஆசாத் அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.