Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மீண்டும் மறு தேர்தல்…

Congress candidate dies of corona infection Re-election ...

Congress candidate dies of corona infection Re-election ...

காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மீண்டும் மறு தேர்தல்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அப்போது மநீம கட்சின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.அதனையடுத்து அனைத்து ஊர்களுக்கும் சென்று பரப்புரை நடத்திய திமிமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தனது வீட்டினுள்ளே தனிமைபடுத்திக் கொண்டார்.

அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவிற்கு தேர்தல் பிரச்சாரத்தின் போதே கொரோனா தொற்று உறுதியானது.அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அந்த நேரத்தில் இவர் செய்ய வேண்டிய பரப்புரை வேலைகளை இவரது மகள் திவ்யா தீவீரமாக களத்தில் இறங்கி மேற்கொண்டார்.மாதவராவ் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு இரண்டுமுறை மாரடைப்பு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதன்பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது இழப்பிற்கு அனைத்து கட்சிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்குமா என பல கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.அதற்கு தேர்தல் ஆணையம் அதிகாரி சத்திய பிரதாசாகு கூறியது,ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் இறப்பதற்கு முன்பே வாக்குபதிவு நடந்ததால் வாக்கு எண்ணிக்கையானது முறைப்படி நடைபெற்றுவிட்டது.இவர் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version