Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்? படு டென்ஷனில் ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரஸ் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இருக்கின்றன. இதில் இதுவரையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரையில் உடன்பாடு ஏற்படவில்லை அதிலும் குறிப்பாக காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் தான் இருந்து வருகின்றது என சொல்லப்படுகிறது

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளில் ஒதுக்குவதற்கு முடிவு செய்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 40 தொகுதிகளை கேட்டு வருகின்றது என்று தெரிகிறது. திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் டெல்லி அளவிலான தலைவர்கள் தினேஷ் குண்டுராவ் மற்றும் உம்மன்சாண்டி போன்றோர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் திமுக எந்த ஒரு சாதகமான முடிவையும் எடுக்கவில்லை. இது காங்கிரஸ் கட்சியை கடுமையான அதிருப்தியில் தள்ளி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையிலான ஒரு குழு நேற்று திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த கே. எஸ். அழகிரி இனி பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியின் டெல்லி அளவிலான தலைவர்கள் தலையீடு இருக்காது என்று தெரிவித்து இருக்கிறார். திமுக தற்போது வரை காங்கிரஸ் கட்சிக்கு 18 முதல் 22 தொகுதிகள் வரையில் ஒதுக்குவதற்கு இசைவு அளித்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்களும் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக அமர வேண்டும் என்று எந்த ஒரு கோரிக்கையையும் மக்களிடம் வைப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில், ஒருவேளை திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்கும்? அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக இருந்து வருகிறது.

ஏனென்றால் காங்கிரஸ் கட்சி ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால், அது அதிமுக பக்கம் வருவதற்கு வாய்ப்பில்லை ஏனென்றால் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. ஆகவே அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வருவதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை காங்கிரஸ் கட்சி நினைத்தால் தற்போது புதிதாக அமைந்திருக்கும் கமல்ஹாசன் கூட்டணியில் இணைய முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.அப்படியே காங்கிரஸ் கட்சி கமல்ஹாசன் கூட்டணிக்கு சென்றாலும் கூட அங்கே முதலமைச்சர் வேட்பாளராக தற்சமயம் கமல்ஹாசன் களமிறங்கியிருக்கிறார். அப்படியிருக்கையில் தேசிய கட்சியான காங்கிரஸ் அவர் கீழ் நிற்பதற்கு சம்மதம் தெரிவிக்குமா என்பது சந்தேகம்தான்.

ஏனென்றால் இதுவரையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அதிமுக இல்லையென்றால் திமுக என்று இரு கூட்டணிக்குள் தான் இருந்தது. ஆனால் இந்த இரு கூட்டணிகளும் தவிர்த்து மூன்றாவதாக ஒரு கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி செல்லும் ஆனால் புதிதாக செல்லும் இடத்தில் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு தான் அந்த கட்சி முயற்சி செய்யும் என்று சொல்கிறார்கள். அந்த வகையில் ஒரு வேலை கமல்ஹாசன் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி செல்லும் ஆனால் அங்கே பிரச்சனை வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version