Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்! வசந்த்&கோ உரிமையாளர் வசந்தகுமாரின் மகன்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் வருவதற்கு இன்னும் மூன்று, அல்லது நான்கு, மாதங்கள் இருக்கும் நிலையில்,, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர், மற்றும் பொருளாளர், செயலாளர், போன்ற பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மறைந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல கே.வி தங்கபாலுவின் மகன் கார்த்திக், திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன், போன்றோரும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கோபன்னா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் 19 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவில், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே எஸ் அழகிரி, ராமசாமி, சிதம்பரம் திருநாவுக்கரசர், செல்லக்குமார் மாணிக்கம் தாகூர், மோகன் குமாரமங்கலம் கார்த்திக் சிதம்பரம், விஷ்ணு பிரசாத் மயூரா ஜெயக்குமார், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி, ஆதித்தன் சசிகாந்த் செந்தில், ஜெயம் ஹாரூன் ரஷீத் ஜோதிமணி போன்றோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

Exit mobile version