தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ்!! தேர்தல் எப்போது?

0
235
Congress made election promises in Telangana!! When is the election?

தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ்!! தேர்தல் எப்போது?

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து மே 10 ஆம் தேதி நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

பாஜக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில், வீடுகள் தோறும் தினமும் அரை லிட்டர் பால் பாக்கெட் வழங்குவதாகவும், வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் உள்ளது போன்று பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் ஆகிய வாக்குறுதிகளை தெரிவித்து உள்ளது. மேலும் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை விதிப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியையும் அளித்துள்ளது.

இது போன்ற அறிவிப்புகளால் கர்நாடக மாநில தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க தேர்தல் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வராத மாநிலத்தில் தனது தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், பிரியங்கா காந்தி  தெலுங்கானா வந்துள்ளார்.  அவரது முன்னிலையில் “ஐதராபாத் இளைஞர் பிரகடனம்” என்ற பெயரில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர், இளைஞர்களுக்கு 10 லட்சம் வரை வட்டியில்லா கடன், தெலுங்கானா தனி மாநிலமாக அமைவதற்காக நடந்த போராட்டத்தில் உயிர் விட்ட இளைஞர்கள் தியாகிகளாக கருதப்பட்டு, அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவரது பெற்றோர்களுக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் ஓய்வூதியம் போன்ற அறிவிப்புகள் அதில் உள்ளது.

ஆனால் தெலுங்கானாவில் இந்த வருட இறுதியில் தான் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு இப்போதே காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது.