காங்கிரஸ் 12 எம்.பி கள் பிஜேபியில் இணைந்தார்களா? காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசே காரணம்? போட்டு உடைத்த வைகோ?

0
152

வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கை இனத்தை அழித்தவர் காங்கிரஸ். காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது காரணம் காங்கிரஸ் என விமர்சனம் செய்துள்ளார்.

’காங்கிரஸ் உதவிஉடன் நான் மாநிலங்கள் அவையில் தேர்வாக வில்லை. காங்கிரஸ் தயவால் நான் என்றுமே நாடாளுமன்றம் செல்லமாட்டேன்’. என வைகோ கூறியுள்ளார். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தயவில் நான் ராஜ்யசபாவுக்குச் செல்லவில்லை. இலங்கையில் ஈழம் இனத்தை கூண்டோடு அழித்த பாவிகள் காங்கிரஸ்” என கே.எஸ்.அழகிரியின் கூற்றுக்கு ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார் ராஜ்யசபா எம்.பி. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

முன்னதாக வைகோவை விமர்சித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ks அழகிரி, ”காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸை குறை சொல்வதா? அரசியல் நாகரீகமற்றுப் பேசுகிறார் வைகோ” என தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜ்யசபா எம்.பி. வைகோ-வை கடுமையாக விமர்சித்தார். காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட விவகாரம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது வைகோ பேசிய பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தமிழக காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

வைகோ கூறுகையில், நான் திமுக ஸ்டாலின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு ஆகியுள்ளேன். “நான் ஒன்றும் காங்கிரஸ் உதவியுடன் எம்.பி. ஆகவில்லை.
இனியும் இதற்கு மேலும் காங்கிரஸ் உதவியுடன் செல்லமாட்டேன். என கடுமையாக பேசியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மேலும் அவர் கூறுகையில், இலங்கை எம் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த காங்கிரஸுக்கு ஒருநாளும் மன்னிப்பே கிடையாது. மன்மோகன் சிங் எனக்கு நெருங்கிய நண்பர். மன்மோகன் சிங் இடம் கூட நான் நண்பனாக இருக்கும் வரை குறையை எடுத்துச் சொல்வேன். அவரை ஒரு நண்பராகப் பாராட்டுகிறேன்.

ஆனால், அரசியல் ரீதியாக எதிர்க்கிறேன். இலங்கை எம் ஈழ மக்களை அழித்த காங்கிரஸ்க்கு மன்னிப்பே கிடையாது. நான் திமுக தலைவர் ஸ்டாலின் மூலமாக மட்டுமே ராஜ்யசபா எம்.பி ஆகப் பதவி ஏற்றேன். காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் அல்ல. காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து விவகாரத்தின் முக்கியக் குற்றவாளியே காங்கிரஸ்தான்.

12 காங்கிரஸ் எம்.பி-க்களும் பாஜக-விடம் விலை போய்விட்டதா?” ஏன் அவர்கள் காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து பரிக்கபட்டதன் விவகாரத்தில் கேள்வி எழுப்ப வில்லை? பிஜேபி உடன் விலை போய்விட்டார்களா என்று ஆவேசமாகக் பேசியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

இதனால் காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் இந்த அறிக்கைக்கு தமிழக காங்கிரஸ் என்ன பதிலடி கொடுக்கும் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்