காங்கிரஸ் போடும் திட்டம்! சோனியா காந்தி இன்று ஆலோசனை!

0
127
Congress party head sonia gandhi meeting

காங்கிரஸ் போடும் திட்டம்! சோனியா காந்தி இன்று ஆலோசனை!

சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்தது.இந்த கூட்டத் தொடரானது ஜூலை மாதம் 19ல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற்றது.கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் அவை நடவடிக்கைகள் எல்லா நாளும் முடங்கி வந்தன.இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி இன்றி ஓபிசி மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தொடரில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மத்திய அரசின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் புதிதாக ஒரு யுக்தியைக் கையாளத் திட்டமிட்டிருக்கிறது.இதன்படி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகள் மற்றும் ஒத்தக் கருத்துள்ளக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.இந்த ஆலோசனைக் கூட்டமானது இன்று நடைபெறவுள்ளது.மேலும் இந்த ஆலோசனைக் கூட்டமானது காணொளி மூலம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்குபெறுகின்றனர்.பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்,சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல்,ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இதைத் தவிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி,தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,இடதுசாரி தலைவர்களான D.ராஜா,சீதாராம் யெச்சூரி மற்றும் பல தலைவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது,வரவிருக்கும் தேர்தல்களில் எப்படி பணியாற்ற வேண்டும் எனவும் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.