ஒரே வார்த்தையில் கூட்டணியை உடைத்தெறிந்த கே. எஸ். அழகிரி! அதிர்ச்சியில் திமுக!

0
117

பாண்டிச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்பதற்கும் தயாராக இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே .எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார். இது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் விரிசலுக்கு முன்னோடி என்று கருதுகிறார்கள்.

புதுச்சேரியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு கொடுத்து வரும் திமுக தற்சமயம் புதுச்சேரி மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது என்பது அங்கே பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது .அதிலும் அந்த மாநிலத்தில் திமுக தலைமையில் புதிய கூட்டணி எனவும், திமுக தலைமையில் தான் ஆட்சி அமைக்கப்படும் எனவும், அந்த மாநிலத்தைச் சார்ந்த திமுகவினர் தெரிவிக்க தொடங்கியிருக்கிறார்கள். இது அந்த மாநிலத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் பாண்டிச்சேரிக்கு பயணம் மேற்கொண்ட திமுகவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் புதுச்சேரியில் இருக்கக்கூடிய 30 இடங்களிலும் திமுகவை வெற்றிபெற செய்வேன் அவ்வாறு வெற்றி பெறாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே .எஸ் .அழகிரி புதுவையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்ற வேறுபாடுகள் அனைத்தும் பேசி தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.இந்த சூழ்நிலையில் திடீரென்று புதுவையில் தனியாக போட்டியிடுவதற்கும் காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது என கே. எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அவர் கூட்டணிக்குள் என்ன நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளோம் .ஆனாலும் பாண்டிச்சேரியில் சகோதரர்களோடு ஒரு சுமுகமான சூழலை உருவாக்க விரும்புகின்றோம். அதே சமயத்தில் தனியாக நிற்கவும் நாங்கள் தயார் தமிழ்நாட்டில் எங்களுடைய கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார் கே. எஸ். அழகிரி.

புதுவையில் திமுக ,மற்றும் காங்கிரஸ், கட்சிகள் இடையில் சுமூகமான சூழ்நிலை ஏற்படவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தனித்து தேர்தலில் களம் காணும்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது .சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பு ஒன்றில் என் .ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அதோடு அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் இடையே மிகப்பெரிய போட்டி சட்டசபை தேர்தலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தனித்து களம் கண்டால் அது திமுக கூட்டணிக்கும் சரி காங்கிரஸ் கட்சிக்கும் சரி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கிறார்கள்.