காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!!

0
138

காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!!

தமிழ் சினிமாவின் திரை பிரபலம் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும் இரண்டறக் கலந்து பெரிய அரசியல் தலைவர்களை உருவாக்கியது. சினிமாவில் இருந்த அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளமானோர் என்றாலும் சிலரால் மட்டுமே அரசியலிம் ஜொலிக்க முடிந்தது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் சினிமாவின் பிரபலம் மற்றும் மக்களிடையே நெருங்கிய தொடர்பை உருவாக்கி அரசியலிலும் வெற்றி வாகை சூடினார்கள்.

தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் சில ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறார். பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை என்றாலும் அரசியலில் களம் கண்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் போர் வரட்டும் தமிழக அரசியலில் குதிப்போம் என்று பல வருடங்களாக மழுப்பி வருகிறார். நான் அரசியலுக்கு வர வேண்டிய நேரத்தை கடவுள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியவர் அவ்வப்போது, சர்ச்சையான கருத்துகளை பேசி வருவதும் அதனால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஏற்பட்டு களேபரம் ஆகின்றது. ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று பல வருடங்களாக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்த வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். நடிகர்கள் வந்துதான் கட்சியை பலப்படுத்த வேண்டுமா என்றும், காங்கிரஸ் கட்சி தனது அரசியலுக்காக நடிகர்களிடம் தூதுவிட்டு பார்க்கிறது என்றும் சிலர் கருத்தை முன்வைக்கின்றனர். பிகில் பட சர்ச்சையிலும் விஜய்க்கு ஆதரவாக கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார். நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர்களை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது ஒரு வகையில் ஏற்க கூடியதாகவே உள்ளது.