நாடாளுமன்றத்தை இந்திய பிரதமர் திறந்து வைக்காமல் பாகிஸ்தான் பிரதமரா திறந்து வைப்பார் – காங்கிரஸ் கட்சி தலைவர் ஆச்சார்யா பிரமோத்!!
புதிய நாடாளுமன்றத்தை இந்திய பிரதமர் திறந்து வைக்காமல் பாகிஸ்தான் பிரதமரா திறந்துவைப்பார் என்று காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் மே 28ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இந்த புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பாஜக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் 25 கட்சிகள் பங்கேற்க்கவுள்ளது.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கவுள்ளது. இந்த 19 எதிர்கட்சிகளும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க காரணம் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் இருப்பதும், ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் நாடாளுமன்றம் திறக்கபடப்போவது இல்லை என்பதும் தான். இதையடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர் ஆச்சார்யா பிரமோத் அவர்கள் திறப்பு விழாவிற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆச்சார்யா பிரமோத் அவர்கள் “நமது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக பாகிஸ்தான் பிரதமர் திறந்து வைக்க வேண்டுமா? பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்க உரிமை உள்ளது. ஆனால் நாட்டை எதிர்க்கும் உரிமை இல்லை. அதனால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பது தொடர்பான முடிவை எதர்கட்சிகள் திரும்பப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
திறப்பு விழாவை புறக்கணிப்பதில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் காங்கியஸ் கட்சியை சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் அவர்கள் கூறியுள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.