Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வரின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்! அதிர்ச்சியில் அதிமுக!

தான் ஒரு விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசு விவசாயிகளுக்கு, எதிராக கொண்டு வந்திருக்கின்ற சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரு வசந்தகுமார் செய்து வைத்த நற்காரியங்களை வைத்து காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி அடையும் எனவும், நரேந்திர மோடியும், அமித்ஷாவும், ஆட்டுவிக்கும் காரணத்தால், தமிழகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். என்றும் தெரிவித்தார்.

சாமானிய மக்கள் பற்றியும், அம்மக்கள் படும் கஷ்டங்கள் பற்றியும், பாஜக பேச தயாராக இல்லை எனவும், பொது மக்களைப் பற்றி கவலைப்படாத பாஜக அதானி மற்றும் அம்பானி பற்றி தான் அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மேலாண் சட்டத்தினால், வெங்காயம் முதல்கொண்டு அத்தியாவசிய காய்கறிகள் அனைத்தின் விலையும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

பொருளாதார சரிவை பற்றி பாஜகவில் யாரும் வாய் திறப்பதில்லை. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகின்றது ஆனால் எட்டாவது அதிசயமாக நம் நாட்டில் மட்டும்தான் எரிவாயு டீசல் பெட்ரோல் போன்றவற்றின் விலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

திரைப்பட நடிகைகள் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கும் பிரதமர் அவர்களுக்கு, மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து பேச நேரமில்லை, எந்த காரணத்திற்காக நடிகை குஷ்பூ பாஜகவில் போய் இணைந்தார் என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அதை பற்றிய கவலையும் எங்களுக்கு இல்லை.

தன்னை தானே விவசாயி என்று கூறிக்கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதற்காக ஆதரித்தார் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

Exit mobile version