Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சமூக நீதி என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானது! உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம்! தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்!

சமூக நீதி என்பது மனித குலத்திற்கு பொதுவான ஒன்று எந்த ஒரு தரப்பிற்கும் அது உரித்தானது அல்ல. ஆகவே 10 சதவீத இட ஒதுக்கீடு சரியான நடவடிக்கை என்று கருதி தமிழக காங்கிரஸ் கட்சி அதனை இதயபூர்வமாக வரவேற்கிறது என்று அந்த கட்சியின் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக தெரிவித்து இருக்கின்ற அவர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொது பிரிவினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழக காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. பெரும்பாலான நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

103 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் சரியா? தவறா ?என்ற விவாதத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் சரி என்று தெரிவித்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் உண்டானால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால், அதனை காங்கிரஸ் கட்சி மனதார வரவேற்கிறது. நாட்டில் 5000 ஆண்டுகளாக சமூக நீதி என்பதே கிடையாது.

சில பேரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நடைமுறையை அந்த காலத்தில் நீதி என்று தெரிவித்து அதனை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு அந்த நடைமுறையை ஜவஹர்லால் நேரு அவர்கள் உடைத்தெறிந்து நாடாளுமன்றத்தில் முதல்முறையாக அரசியல் சட்டத்தை திருத்தி இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்தார். தற்போது 75 ஆண்டுகள் கடந்து விட்டனர்.

ஆகவே தற்போதைய நடைமுறையை பின்பற்றி இன்று பொருளாதாரத்தில் நலிந்துள்ள பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

2005, 2006 இல் இதற்கான முயற்சி அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அரசால் முன்னெடுக்கப்பட்டது. 2014இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால் பாரதிதாசன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 வருடங்கள் எடுத்துக்கொண்டது என கூறியுள்ளார் கே எஸ் அழகிரி.

நீதிபதி ரவீந்திர பட் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோர் 38 சதவீதம் வறுமையில் இருக்கிறார்கள். பழங்குடியினர் 48% பேர் இருக்கிறார்கள் பிற்படுத்தப்பட்டோரில் 33 புள்ளி ஒரு சதவீதம் பேர் வறுமையில் வாடி வருகிறார்கள். ஆகவே இவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க வேண்டுமென்று அவர் கூறியிருக்கிறார்.

தற்பொழுது பொது பிரிவினருக்கு 27 சதவீதமும், எஸ். சி பிரிவினருக்கு 15% பழங்குடியினருக்கு 7. 5 சதவீதமும், இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை மேலும் மேம்படுத்த முடியுமா? என்பதை சட்ட வல்லுனர்களும், அரசியல் அறிஞர்களும், சமூக பங்கேற்பாளர்களும் விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பது சமூக நீதியாகாது. ஏனென்றால் 5000 ஆண்டுகளாக சிரமப்பட்ட பெரும் பகுதி சமுதாயத்துக்கு சமூக நீதி வழங்கப்படவில்லை.

தற்சமயம் எங்களுக்கும் வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால் எங்களை போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று தெரிவிப்பது சமூக நீதி இல்லை எனக் கூறியுள்ளார்.

Exit mobile version