TVK Congress: தவெக வுடன் கூட்டணி வைப்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடானது விக்ரவாண்டியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் விஜய் அவர்கள் கட்சி கொடி கொள்கை குறித்து விளக்கம் அளித்திருந்தார். மாநாட்டின் முடிவில் கூட்டணி கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு தருவதாகவும் பேசியிருந்தார். இருப்பினும் இவருடைய அரசியல் நகர்வில் முதல் எதிரியாக திமுக மற்றும் பாஜக இருப்பதால் அவர்களின் கூட்டணி கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என பலரும் எண்ணினர்.
ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் விஜய்க்கு எதிராக பல கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் வருகை புரிந்துள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் தவெக-வில் கூட்டணி வைக்கப் போகிறீர்களா என்பது குறித்து செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது, எஃகு கோட்டை போன்ற உறுதியான கூட்டணி தான் திமுகவுடன் எங்களுக்குண்டான பந்தம்.
இதனை ஒருபொழுதும் முறிக்க முடியாது, மேற்கொண்டு இந்தியா கூட்டணியில் எந்த ஒரு பிளவும் ஏற்படாது என கூறினார். அதேபோல விஜய் அவர்கள் தனது கட்சியை காமராஜர் வழி அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நீங்கள் கூற வருவது என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளனர். காமராஜர் தேசியத்தின் பொது சொத்து என்பதால் அவர் அனைவரிடத்திலும் கொண்டாட வேண்டியவர் தான்.
ஆனால் அதன் முழு உரிமை எங்கள் காங்கிரசுக்கு மட்டும்தான் உள்ளது என தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியை அடுத்து காங்கிரசும் விஜய்க்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.