Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காங்கிரஸாரின் போராட்டம்! அடிதடியில் ஈடுபட்ட பிரபல நடிகர்!

Congressman's struggle! Famous actor involved in the beat!

Congressman's struggle! Famous actor involved in the beat!

காங்கிரஸாரின் போராட்டம்! அடிதடியில் ஈடுபட்ட பிரபல நடிகர்!

கேரளாவில் தற்போது தொடர்ந்து ஏறி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் பல தொடர்ந்த நிலையில் உள்ளனர். இன்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடந்தது. இதனால் கொச்சி முதல் எர்ணாகுளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.

கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் வரிசைகட்டி நின்றன. அதன் காரணமாக பலர் அவதியுற்றனர். அதில் பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜும் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர் மலையாளத்தில் ஜோசப் என்ற மலையாள படத்தின் மூலம் மலையாளத்தில் உயர்ந்த நடிகராக முன்னிலை வகிக்கிறார்.

தமிழில் இவர் ஜகமே தந்திரம் மூலம் அறிமுகமாகி உள்ளார். சிவதாஸ் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அதன் காரணமாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சென்ற அவர், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் இருப்பதாக வாதிட்டுள்ளார். அதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள், அவரின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேலும் அதனை தொடர்ந்து அதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கேயே நின்று சத்தம் போட ஆரம்பித்துள்ளார். இவ்வளவு பேர் மணிக்கணக்கில் செல்வதற்கு வழி இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் நிற்கின்றன. சாதாரண மனிதர்களை தொந்தரவு செய்வதன் மூலம் அரசு மாறுமா என்ன? சாதாரண மனிதர்களை தொந்தரவு செய்வதினால் அவர்களுக்கு இதில் என்ன லாபம் இருக்கிறது.

ஒரு காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக, பாதிக்கப்பட்ட சாதாரண மக்களை தான் இவர்கள் மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மருத்துவமனை போன்ற அவசர தேவைகளுக்காக செல்லும் மக்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. அது போன்றவர்கள் இங்கே இறந்து விட்டால் என்ன செய்வது?

நான் காங்கிரஸ் கட்சியையும், அதன் கருத்துக்களையும் மதிக்கிறேன். எரிபொருள் விலை உயர்வு ஓர் உண்மையான பிரச்சினை தான். ஆனால் இதை விடுத்து வேறு பல்வேறு வழிகளில் முயற்சி செய்யலாம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போக்குவரத்தை சீர் செய்ததுடன் சமாதான பேச்சுவார்த்தைகளும் நடத்தினார்கள்.

ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகள் நடிகர் குடிபோதையில் இருப்பதாகவும், அதன் காரணமாக கட்சியின் பெண் உறுப்பினர்கள் இடம் சண்டையிட்டு வேண்டுமென்றே போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி செய்வதாகவும் கூறினர். அதனால் நடிகரை மருத்துவ பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்ட போலீசார் அழைத்துச் சென்றனர். அதன் மூலம் போராட்டத்தின் போது அவர் குடிபோதையில் இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளன. முன்னாள் மேயர் டோனி சம்மினி உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் 7 பேர் மீதும் போலீஸார் ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version