Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒன்று சேரும் செவ்வாய் சூரியன் – அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

#image_title

ஒன்று சேரும் செவ்வாய் சூரியன் – அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

வரும் செப்டம்பர் 18ம் தேதி கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி செய்கிறார். பெயர்ச்சி ஆனதும், அவர் செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

வரும் செப்டம்பர் 18ம் தேதி கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பெறுவீர்கள். சிறப்பாக வேலை செய்து அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிரிகளை தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். வாகனம், சொத்து, வீடு வாங்குவீர்கள். ஆனால் வாகனம் ஓட்டும்போது கவனம் வேண்டும்.

கடகம்

வரும் செப்டம்பர் 18ம் தேதி கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி செய்வதால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். தொழில் சிறக்கும். வியாபாரம் பெருகும். சாதகமான பலன்களை பல பெறப்போகிறீர்கள்.

விருச்சிகம்

வரும் செப்டம்பர் 18ம் தேதி கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி செய்வதால், விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. தொழிலில் நல்ல முதலீடு செய்வீர்கள். அதில் லாபமும் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கு மரியாதை பெருகும். சக ஊழியர்களின் உத்துழைப்பு கிடைக்கும்.

Exit mobile version