நேற்று சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.அப்பொழுது பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18-ல் இருந்து 21 வயதாக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்த
வரும்நிலையில் அவர்களின் திருமண வயதை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அவர் அந்த உரையில் கூறினார்.இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் பரிந்துரைகளின்படி பெண்களின் திருமண வயது மாற்றியமைப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும், மோடி அவர்கள் தெரிவித்தார்.
மோடி அவர்களின் இந்த கருத்தை கனிமொழி எம்பி வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க படுகின்றது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.என்ற அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.
https://twitter.com/KanimozhiDMK/status/1294869002724859904?s=08