Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

#image_title

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி, எம்.பி.பி.எஸ் படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட் தேர்வு எழுதி, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவி ஒருவர், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட தன்னை இயலாமையாகக் கருதி, இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, ஒரு நாளுக்கு இரு முறை இன்சுலின் செலுத்திக் கொள்ளும் தனக்கு சிறப்பு பிரிவில் மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக் குழு தரப்பில், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை இயலாமையாகக் கருதுவது குறித்து மாநில அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும், தேர்வுக் குழுவுக்கு எந்த பங்கும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இதுகுறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version