Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அயோத்தியிலும் ஆகஸ்ட் 15லும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து சரத்தான 370ஐ நீக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த நாளை ஒட்டி தீவிரவாதிகள் தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டியிருப்பதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அயோத்தியில் ராமர் கோயில் பூஜையும் அதே நாளில் நடக்க இருக்கிறது. நிர்மூலம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அதே நாளில் இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையின் அறிக்கையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அமைப்பினரால், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவிப்பு செய்துள்ளது. இந்த அறிக்கையில், பிரதமர் கலந்து கொள்ள இருப்பதால் உத்தரப்பிரதேசத்தில் மாநிலம் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மேலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், மற்றும் அதி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், மாநிலங்களில் உள்ள தலைநகரங்களிலும் பாதுகாப்பினை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் உத்திரப்பிரதேசத்தின் காவல்துறை அதிரடிப்படை, மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

நாளை முதல் தொடங்கும் இந்த எச்சரிக்கைப் பாதுகாப்பு முறைமைகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இருக்கும். ஏனெனில் நாளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3ம் தேதி இந்துக்களின் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பிறகு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் எச்சரிக்கையுடன் பலத்த பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version