Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது! புதிய டிஜிபி போட்ட உத்தரவு!!

காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது! புதிய டிஜிபி போட்ட உத்தரவு!!

 

காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது செல் போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று புதிதாக பதவியேற்றுக் கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

அது மட்டுமில்லாமல் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி சங்கர் ஜிவால் மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 

டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவுகள்;

 

காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பலமுறை காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்த பின்னரும் இந்த நிலை தொடர்கின்றது. முக்கியமான.நேரங்களிலும் காவலர்கள் செல் போனை பயன்படுத்துகின்றனர்.

 

பணியில் இருக்கும் பொழுது காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதால் பணியில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. மேலும் தரவுகளை சேமிக்கும் பொழுது கவனச் சிதறல் ஏற்படுகின்றது. மேலும் நடவடிக்கை எடுப்பது பற்றி யோசிக்கவும் இது இடையூறாக இருக்கின்றது. ஆகவே களத்தில் பணியில் இருக்கும் காவலர்கள் பணியில் மட்டும் தான் கவனமாக இருக்க வேண்டும். செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

 

போக்குவரத்து காவல்துறையினர் பணியில் இருக்கும் நேரம் முழுவதும் போக்குவரத்து சென்று வருவதை நேரடியாக ஆய்வு செய்தபடி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பவர்களையும் விதிகளை மீறுவோர்களை சரியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் கவனமாக இருந்தால் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

 

அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை கண்டித்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Exit mobile version