தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்!

0
169

தொடர்ந்து இருமல் வருகின்றதா? ஏலக்காய் போதும்!

தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

அவ்வாறு தொடர்ந்து இருமல் வந்தால் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

ஏலக்காய் என்பது அனைத்து வகையான இனிப்பு பண்டங்களிலும் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஏலக்காயில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளது. அதனை நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி, வாய் துர்நாற்றம் முற்றிலும் விலகுதல் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

தொடர்ந்து இருமல் வந்தால் அதனை மிக எளிமையான முறையில் குணப்படுத்தும் தன்மை கொண்டது தான் ஏலக்காய். தொடர்ந்து இருமல் வந்து கொண்டே இருந்தால் நான்கு அல்லது ஐந்து ஏலக்காயை நன்கு மென்று சாப்பிட்டால் உடனே அந்த இரும்பல் நின்று விடும்.

மேலும் ஏலக்காய் ஜீரண சக்தியை தூண்டும். நாம் எந்த வகையான உணவுகளை எடுத்தாலும் அதனை எளிதான முறையில் ஜீரணப்படுத்த ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வயிற்று சம்பந்தமான உபாதைகளை குணப்படுத்த ஏலக்காய் பயன்படுகிறது.

நாம் தினமும் உடற்பயிற்சி நடை பயிற்சி செய்யவில்லை என்றாலும் இரண்டு அல்லது மூன்று ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே போதும் அதற்கான முழுமையான பயன்கள் நமக்கு கிடைக்கும்.