Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மலச்சிக்கல்? 10 நிமிடத்தில் சரி செய்யும் பவர் புல் பாட்டி வைத்தியம்..!!

#image_title

மலச்சிக்கல்? 10 நிமிடத்தில் சரி செய்யும் பவர் புல் பாட்டி வைத்தியம்..!!

நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது.

மலசிக்கல் அறிகுறி:-

வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு, பசியின்மை, குமட்டல் உணர்வு.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

மலத்தை அடக்கி வைப்பது, உடலுக்கு தேவையான நீரை பருகதாதது, அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, மலத்தை கழிக்காமல் அடக்கி வைத்தல், உணவில் நார்ச்சத்து குறைவாக இருத்தல், எளிதில் செரிமானம் ஆகாத உணவை உண்பது, வயது முதிர்வு, அதிகப்படியான மன அழுத்தம்.

மலத்தை வெளியேற்றுவதற்காக நாம் செய்யும் தவறு:-

சூடான காபி, தேநீர் பருகுதல், சிகரெட் புகைத்தல், அதிகளவு தண்ணீர் குடித்தல்.

மலச்சிக்கல் பாதிப்பை நிமிடத்தில் சரி செய்யும் பாட்டி வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*விளக்கு எண்ணெய்

*கல் உப்பு

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். அவற்றை சூடு படுத்தி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இந்த சூடானான நீரை ஒரு டம்ளருக்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கலக்கி பருகவும். இந்த பானத்தை குடித்த அடுத்த 5 நிமிடத்தில் உடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலம் வெளியேறத் தொடங்கும்.

Exit mobile version