மலச்சிக்கல்? குடலில் உள்ள மலக் கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 1 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைத்து விடும்!!

0
160
#image_title

மலச்சிக்கல்? குடலில் உள்ள மலக் கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 1 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைத்து விடும்!!

இன்றைய கால உணவு முறையில் அதிக ருசி இருந்தாலும் அதில் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை. இதனால் அனைவரும் பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றோம். நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு தேவையற்ற கழிவுகள் வெளியேறினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதற்கு அதிக நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் நம்மில் பலர் இதனை கண்டு கொள்ளாமல் விடுவதினால் இது குடல் சார்ந்த பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விடுகின்றது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்

*தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை

*மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது

*குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சைச் சாறு

*கல் உப்பு

*தண்ணீர்

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் 3 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பு பற்ற வைத்து மிதமான தீயில் அந்த தண்ணீர் பாத்திரத்தை வைக்க வேண்டும்.

அடுத்து கல் உப்பு 1 தேக்கரண்டி போட்டு நன்கு கலக்கி விடவேண்டும். இதையடுத்து 3 பெரிய அளவு அதிக புளிப்பு நிறைந்த எலுமிச்சை பழத்தை அரிந்து அவற்றின் சாற்றை அதில் பிழிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் சூடேறி வெது வெதுப்பான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இதையடுத்து ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்து அதில் தேவைக்கேற்ப கல் உப்பு சேர்த்து கலக்கி அதனை குடிக்க வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள உப்பு, எலுமிச்சை சாறு கலந்த 3 லிட்டர் தண்ணீரை தொடர்ந்து அன்றைய நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்று பகுதியில் அடைப்பட்டு கிடந்த நாள்பட்ட கழிவுகள் அனைத்தும் சுகபேதியாகவும்,வாந்தியாகவும் வெளிவர தொடங்கும்.இதனால் குடல் சுத்தம் செய்யப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.