Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மலச்சிக்கல் பிரச்சனையா? இதை அருந்துங்கள் அரை மணி நேரத்தில் சரியாகும்!

மலச்சிக்கல் பிரச்சனையா? இதை அருந்துங்கள் அரை மணி நேரத்தில் சரியாகும்!

கடுமையான செரிமான பிரச்சனையாலும்,மலச்சிக்கலாலும் அவஸ்தை படுபவர்கள் இந்த எளிமையான பானத்தை குடித்தாலே அரை மணி நேரத்தில் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

மலச்சிக்கல் பொதுவாக கண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் உடலுக்கு வேலை இல்லாததாலும் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவர். இதற்கு முக்கிய காரணம் உடலின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்காதது தான்.

குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் அதிகம் தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதால் நிறைய பேர் தேவையான தண்ணீர் அருந்துவதில்லை. இது செரிமான பிரச்சனை மலச்சிக்கல் என ஆரம்பித்து மூலத்தில் கொண்டு போய் விடுகிறது. அதனால் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

மலச்சிக்கல் வந்தால் என்ன செய்வது?? உங்களுக்கு சாதாரண மலச்சிக்கல் பிரச்சனை என்றால் இரண்டே இரண்டு கொய்யாப்பழம் போதும். உங்களுடைய குடல் இயக்கம் சீராகி அடுத்த நாளே இந்த பிரச்சனை சரியாகும்.கொய்யாப்பழத்திற்கும் சரியாகவில்லை எனில் இந்த பானத்தை அருந்தி பாருங்கள். உடனடியாக சரியாகும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். அதில் ஒரு ஸ்பூன் அளவு பெருஞ்சீரகம் அதாவது சோம்பு சேர்க்கவும். இதை கொதிக்க விடவும். ஓரளவு கொதித்ததும் இதை ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் சேர்க்கவும். செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெய் என்றால் மிகவும் நல்லது.

விளக்கெண்ணெய் குடல் இயக்கத்தை சீராக பராமரிக்க உதவும். அடுத்து இதில் சேர்க்க வேண்டிய பொருள் அரை மூடி எலுமிச்சை சாறு, சிறிது இந்து உப்பு சேர்க்கவும். சாதாரண உப்பு என்றால் கூட பரவாயில்லை. தற்போது இந்த பானம் தயார்.

சரி இதை எப்படி எவ்வாறு அருந்துவது?? இதை காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். அரை மணி நேரத்தில் வயிறு சுத்தமாகும். பொதுவாக இதனை விடுமுறை காலங்களில் குடிப்பது நல்லது.ஏனெனில் இதை குடிப்பதால் சில பேருக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட மலம் வெளியேறும்.

இது காலையில் பலன் தரவில்லை எனில் அன்று இரவு தூங்கும் முன்பு இதே போல் பானம் தயார் செய்து குடிக்கவும்.கட்டாயம் காலையில் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்து விடும். இந்த பானத்தை தினமும் அருந்தக்கூடாது எப்போது உங்களுக்கு கடுமையான மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறதோ அப்போது தயார் செய்து குடித்தால் போதும். மற்ற நேரங்களில் தேவையான அளவு தண்ணீரும் சரியான உணவு முறைகளையும் பின்பற்றினாலே மலச்சிக்கல் என்ற ஒன்று நம்மிடம் நெருங்காது.

Exit mobile version