குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா? கவலை வேண்டாம்… இதை செய்தால் போதும்!
குழந்தைகள் ஆசைப்பட்ட பொருட்களை பெற்றோர்கள் வாங்கி கொடுப்பதாலும், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், தண்ணீர் சரியாக குடிக்காவிட்டாலும் மலச்சிக்கல் பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடும்.
இதனால், குழந்தைகள் அவஸ்தை படுவார்கள். இதை உடனே புரிந்து கொண்டு பெற்றோர்கள் இயற்கை வைத்தியகளை கொடுக்க வேண்டும்.
சரி வாங்க… குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் –
தேன்
ஒரு டம்ளர் பாலில் 2 ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மலச்சிக்கல் பிரிச்சினை சரியாகிவிடும்.
காய்கறிகள்
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்பட்டு விட்டால், நார்ச்சத்து அதிகமாக உள்ள பச்சை இலை, காய்கறிகளை கொடுத்தால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை குணமாகும்.
ஆகவே, முட்டைக்கோஸ், பீட்ரூட், பூசணிக்காய், பசலைக் கீரை, கேரட் ஆகியவற்றை அதிகளவு குழந்தைகளுக்கு உணவாக கொடுத்தால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுத்து நிறுத்தும்.
ஆளிவிதை
பொதுவாகவே ஆளிவிதையில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆளிவிதையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்தால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.
விளக்கெண்ணெய்
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்பட்டால் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல் உடனே சரியாகும்.
தண்ணீர்
மலச்சிக்கல் பிரச்சினைக்கு தண்ணீரும் ஒரு காரணம். தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், உடலில் வறட்சி ஏற்பட்டு மலச்சிக்கல் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். எனவே, குழந்தைகளுக்கு அதிகளவில் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.
வாழைப்பழம்
மலச்சிக்கல் ஏற்பட்ட குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுத்தால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.
ஓமம்
வெதுப்பான தண்ணீரில் 1 கரண்டு ஓமம் மேற்றும் சர்க்கரை கலந்து குடிக்க கொடுத்தால், மலச்சிக்கலால் அவஸ்திப்படும் குழந்தைகளுக்கு இப்பிரச்சினையிலிருந்து விடுபட்டு நிவாரணம் கிடைக்கும்.