Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐஸ் வாட்டர் ஆபத்து! ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி தெரியுமா..?

ஐஸ் வாட்டர் ஆபத்து! ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி தெரியுமா..?

தற்போது சுட்டெரிக்கும் அக்னி வெயிலின் காரணத்தால் நாம் தண்ணீர் அதிகமாகப் பருகுவோம். அதுவும் வெளியே எங்காவது சென்று வந்தால் உடனடியாக நமது வீட்டிலிருக்கும் குளிர் சாதன பெட்டியைத் திறந்து அதில் வைத்துள்ள தண்ணீரை எடுத்துக் குடிக்க துவங்கி விடுவோம். அது நமக்கு சளி, நீர் கோர்வை உள்ளிட்ட பிரச்சனைகளைக் கொடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. வெளியிலிருந்து வந்தவுடன் சாதாரண தண்ணீர் கொடுப்பதே நல்லது என்கிறார்கள்.

அதே வேளையில் இந்த குளிர்ந்த தண்ணீரை உணவுடன் எடுத்துக் கொள்ள கூடாது என கூறுகின்றனர் மருத்துவர்கள். அதற்க்கு காரணமாக நமது உணவு பழக்கத்தில் அதிகம் எண்ணை உபயோகிக்கும் வழக்கம் இருப்பதால், நாம் உணவுடன் குளிர்ந்த நீரை எடுத்து கொள்ளும் போது அது உணவிலுள்ள எண்ணெய்யை இறுக வைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறுகிறனர்.

இதனால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு கொழுப்பின் அளவு கூடும், இதன் மூலம் இதயம், சிறு நீரகம் உள்ளிட்ட பிரச்சனைக்கு வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.

குறிப்பாக இருதய நோயாளிகள் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மருத்துவர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? இதை நீங்களே ஆய்வு செய்து கொள்ளலாம்.

நாம் விரும்பி சாப்பிடும் இனிப்பு பலகாரமான அல்வாவிலிருந்து சிறு பகுதியை எடுத்துக் குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அது கெட்டியாகி இருக்கும். அதிலிருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாகக் காணாமல் போய் இருப்பது போல் இருக்கும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே இறுகிய நிலையில் படிந்து வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும். உங்கள் விரலை அதில் வைத்தால் அது உருகிவிடும்.

சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் குளிர்ந்த தண்ணீர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடும்.

எனவே குளிர்ந்த தண்னீரை உணவினுடன் எடுத்து கொள்வதை தவிர்த்திடுங்கள்.

Exit mobile version